காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தேவி (32). கர்ப்பிணியான இவர் எம்பிராய்டிங் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த வியாழக்கிழமையிலிருந்து காணாமல் போயுள்ளார். இதனையடுத்து இவரது கணவர் நேற்று (ஜூன் 7) அளித்த புகாரின் பேரில் சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை நடித்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய முயன்றபோது தேவி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக கால்வாயின் சிலாப்பிற்கு அடியில் கிடந்துள்ளார். பின்னர் போலீசார் வந்து தேவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.