கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் 400 பேரை காணவில்லை. என்.டி.ஆர்.எஃப், ராணுவம், காவல்துறை, வனத்துறை, சுகாதாரப் பணியாளர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து குழுக்கள் அமைத்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.