உத்திரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நங்கல் சோதி கிராமத்தில் இன்று (ஆக.7) காலை முதலை சுற்றித் திரிந்தது. குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலையை உள்ளூர்வாசிகள் விரட்டியடித்தனர். அதில் ஒருவர் தனது காலால் முதலையை உதைத்தார். இதற்கிடையே, கிராம மக்கள் சிலர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த முதலை ஆற்றுக்குள் விரட்டியடிக்கப்பட்டது.