ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திலேயே என்டிஏ அரசின் சாயம் வெளுத்து விட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “என்டிஏ அரசு தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான பட்ஜெட். கூட்டணி கட்சிகளை தக்க வைக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட். கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க என்டிஏ அரசு செயல்படுகிறது" என அடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.