சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று (ஆகஸ்ட் 15) சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பள்ளி மாணாக்கர்கள், ராணுவ அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.