மின்னல் வேகத்தில் வந்த கார்.. பறந்து விழுந்த பெண்..

82பார்த்தது
புனேவின் புறநகரில் உள்ள ஹிஞ்சேவாடியில் ஒரு இளம்பெண் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று வேகமாக அந்த பெண் மீது மோதியது. இந்த விபத்தில் இளம்பெண் காற்றில் பறந்து கீழே விழுந்தார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த மே 23ஆம் தேதி நடந்த இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி