நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 22) தொடங்குகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்கிறார். நாளை (ஜூலை 23) அவர் நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வர இருந்ததால், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்தார். அதன்படி முழுமையான பட்ஜெட்டை நாளை அவர் தாக்கல் செய்கிறார். இது, அவர் தாக்கல் செய்யும் 7ஆவது பட்ஜெட் ஆகும்.