ஒடிசா மாநிலத்தின் ஜஜ்பூரை சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த சனிக்கிழமை (அக். 26) அன்று முதியவர் ஒருவர் தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினார். இதில் கடுமையாக காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் பெற்றோர், இந்த கொடூர சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.