துபாயில் செட்டில் ஆகும் அஜித்குமார்?

550பார்த்தது
துபாயில் செட்டில் ஆகும் அஜித்குமார்?
விடாமுயற்சி படத்தின் போது நடிகர் அஜித் குமார் துபாயின் புகழ்பெற்ற பாம் ஜுமேரா என்கிற இடத்தில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகவல் வெளியானது. இந்நிலையில் துபாயில் துபாய் மெரீனா என்கிற இடத்தில் பலகோடி ரூபாய் செலவில் இரண்டாவது வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் குமார் குடும்பத்துடன் பொது இடங்களுக்குச் செல்வது குழந்தைகளுடன் விளையாடுவது என தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் சூழ்ந்துக் கொள்கிறார்கள். இப்படியான சூழலைத் தவிர்க்க துபாயில் குடும்பத்துடன் செட்டில் ஆக அஜித் குமார் முடிவு செய்திருக்கலாம் என்றும் அதற்காகவே இந்த வீடுகளை அவர் வாங்கியிருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி