மத்திய பட்ஜெட் உரையில் மாநிலத்தின் பெயர் குறிப்பிடவில்லை என்றால் நிதி ஒதுக்கப்படவில்லை என அர்த்தம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலளித்து வரும் நிர்மலா சீதாராமன், "முட்டாள் தனமான வாதங்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. இந்த பட்ஜெட்டில் ரூ.9,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் கேரளாவிற்கு அளிக்கபட்டுள்ளது. ஜம்மு, காஷ்மீருக்காக ரூ.17,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.