முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீ காந்த் வழிபாடு

82பார்த்தது
ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நவகிரக கோயில்களில் பிரதானமாக விளங்கும் சூரியனார்கோயிலில் மகா அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜை. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீ காந்த் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு.

ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நவகிரக கோயில்களில் பிரதானமாகவும் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகவும் விளங்கும் சூரியனார் கோயில் அருள்மிகு உஷாதேவி, சாயாதேவி உடனாகிய சிவசூரியப்பெருமானுக்கு விஷேச பூஜைகள் நடந்தது. கோயிலின் மகா அபிஷேக மண்டபத்தில் சுவாமி அம்பாள் உற்சவர்கள் எழுந்தருள பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகமும் தொடர்ந்து சிறப்பு ஹோமங்களில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மகா அபிஷேகமும்நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீ காந்த் தனது குடும்பத்தினருடன் பங்கேற்று வழிபாடு நடத்தினார். இன்று விடுமுறை தினத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி