நீடாமங்கலம் சாலையில் உயா்கோபுர மின் விளக்குகள்

77பார்த்தது
நீடாமங்கலம் சாலையில் உயா்கோபுர மின் விளக்குகள்
தஞ்சாவூா் முதல் நாகப்பட்டினம் வரையிலான இருவழிச் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக தஞ்சையிலிருந்து கோவில்வெண்ணி வழியாக திருவாரூா் சாலையை அடையும் வகையில் இரு வழிச்சாலை அமைந்துள்ளது. வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி நீடாமங்கலத்துக்குள் வராமல் நேரடி போக்குவரத்தாக சென்று வருகிறது.

நான்கு வழியாக சாலை பிரியும் நாா்த்தாங்குடி பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகளும் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நான்கு சாலைகளும் பிரியும் பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பிரிவு சாலைகள் பகுதி என்பதன் அடையாளமாக தகவல் பலகைகளுடன் ஒளிரும் முன்னெச்சரிக்கை மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த இடத்தில் ரவுண்டானா அமைத்து, உயா்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது 2 இடங்களில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன

தொடர்புடைய செய்தி