ஜே. ஆர். சி. பயிற்சி முகாம்

82பார்த்தது
ஜே. ஆர். சி. பயிற்சி முகாம்
திருவிடைமருதூர் ஒன்றிய அளவிலான ஜே. ஆர். சி. பயிற்சி முகாம் அம்மாசத்திரம் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தாளாளர் டாக்டர் மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது. 28 பள்ளிகளை சேர்ந்த ஜே ஆர்சி ஆலோசகர்கள், 225 ஜூனியர்கள் பங்கேற்றனர். திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் பாஸ்கரன், பொருளர் ஃபைஸ் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சே. புதூர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தேசிய கொடியினை ஏற்றி வைத்து ஜூனியர்கள் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை எடுத்துரைத்தார். கொரோனா காலத்தில் சிறந்த சேவைக்காக கார்த்திகேயன் மற்றும் பலருக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், சென்னை தொழிலதிபர் ஜேஆர்சி புலவர் திரிசக்தி சுந்தர்ராமன், திருசக்தி குழும இயக்குனர் நளினி சுந்தரராமன், ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, கும்பகோணம் மாவட்ட மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி