புதிதாக கட்டப்பட்ட கும்பகோணம் உதவி இயக்குநர் அலுவலகம் திறப்பு

85பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட கும்பகோணம் உதவி இயக்குநர் அலுவலகம், களக் கண்காணிப்பு மற்றும் உழவர் பயிற்சி மையம் மற்றும் ரூபாய் 77 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட கால்நடை பெரு மருத்துவமனை ஆகியவற்றை, சென்னையில் இருந்தபடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காணொளிக் காட்சி வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான சு. கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் செ. பூர்ணிமா, வட்டாட்சியர் ச. சண்முகம், மாநகராட்சி மேயர் க. சரவணன், துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு. ப. தமிழழகன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி