திருவிடைமருதூரில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

60பார்த்தது
திருவிடைமருதூர் தாலுகா அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காலை தமிழக அரசை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் தொடர்ந்து வழங்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தொழிற்சங்க பேரவை சட்ட துணை ஆலோசகர் வைரநாதன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி