அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் துவக்கம்

71பார்த்தது
அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் துவக்கம்
திருவையாறில் மூன்றாம் கட்ட குடிநீர் விரிவாக்கம் (அம்ருத் 2. 0) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பை பேரூராட்சி தலைவர் கஸ்தூரிநாகராஜன் ஆய்வு செய்து தொடங்கி வைத்தார். திருவையாறு பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் குடிநீர் விரிவாக்கம் மூலமாக (அம்ரூத் 2. 0) முதற்கட்டமாக மேல் நீர் தேக்க தொட்டி அந்தணர்குறிச்சி, மேலவட்டம், பருத்திகுடி ஆகிய வார்டுகளில் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன, இரண்டாவது கட்டமாக அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் மூன்றாம் கட்ட பணியாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை திருவையாறு பேரூராட்சி தலைவர் கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவர் நாகராஜன், ஆகியோர் பணி நடைபெறும் இடமான 12 வது வார்டு அகிலாண்டபுரத்திற்கு நேரில் சென்று பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்து நடைபெறும் பணியினையும் ஆய்வு செய்து குடிநீர் இணைப்பை தொடங்கி வைத்தார்கள்.
இதில் வார்டு உறுப்பினர் பேரூராட்சியின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள் பணியினை செம்மையாகவும் பொது மக்களுக்கு எந்த விதமான இடையூறுகள் இல்லாமல், பிரச்சனைகள் இல்லாமல் பொதுமக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என பணி செய்பவர்களிடமும் ஒப்பந்ததாரர்களிடமும் பேரூராட்சி தலைவர் வேண்டுகோள்விடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி