மாறனேரியில் "மக்களுடன் முதல்வர்" முகாம்.

79பார்த்தது
மாறனேரியில் "மக்களுடன் முதல்வர்" முகாம்.
திருக்காட்டுப்பள்ளி அருகே மாறனேரி ஊராட்சியில் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் பூதலூர் வட்டாட்சியர் அ. மரிய ஜோசப், பூதலூர் ஒன்றியக் குழு தலைவர் கல்லணை செல்லக்கண்ணு முன்னிலை வகித்தனர். திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் முகாமை துவக்கி வைத்தார். மின்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டு அப்பகுதி மக்கள் 617 பேரிடம் மனுக்களை பெற்று துறை வாரியாக பரிசீலனைக்கு அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி