தஞ்சை மருத்துவமனையில் ரூ. 1. 50 கோடி முறைகேடு - ஊழியர் கைது

64பார்த்தது
தஞ்சை மருத்துவமனையில் ரூ. 1. 50 கோடி முறைகேடு - ஊழியர் கைது
தஞ்சாவூரில், தனியார் மருத்துவமனையில் ரூ. 1. 50 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

தஞ்சாவூர் வ. உ. சி. நகரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மனிதவளப் பிரிவு மேலாளராக மதுரை மாவட்டம் அழகர் கோயில் சாலை சுந்தரராஜன்பட்டியைச் சேர்ந்தவர் ஜோக்லு ராஜ்குமார் (36), என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

இவர் மருத்துவமனையில் பயிற்சிக்கு வரும் செவிலியர்களிடம் மாதந்தோறும் பணம் வசூலித்தது, மருத்துவமனையின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது, மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்கியது, பயிற்சி பெறும் பணியாளர்களுக்கு கேன்டீனில் உணவுக்காக வழங்க வேண்டிய பணத்தை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மருத்துவமனையின் பணத்தை எடுத்து அதனை அவர்களுக்கு கொடுத்தது போல் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆம் தேதி வரை இந்த முறைகேட்டால் மருத்துவமனைக்கு ரூ. 1. 50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் சரவணன், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து, தலைமறவாக இருந்த ஜோக்லு ராஜ்குமாரை சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி