கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரித்து பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடும். அதில் இருந்து தப்பிக்க 12 உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர், தர்பூசணி, சின்ன வெங்காயம், வெள்ளரி, தயிர், இளநீர், புதினா, கற்றாழை, வெண்பூசணி, மோர், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், அவகேடோ ஆகிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.