கண்ணாடி பாட்டில்கள் வைத்திருந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்

72பார்த்தது
கண்ணாடி பாட்டில்கள் வைத்திருந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்
தஞ்சாவூரில்
டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் விதமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான கண்ணாடி பாட்டில்களைக் குவித்து வைத்திருந்த தனியார் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.

தஞ்சாவூர் மாநகரில் ஆணையர் இரா. மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, டெங்கு கொசுப்புழு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவில் மாநகர் நல அலுவலர் வீ. சி. சுபாஷ் காந்தி கடந்த வாரம்
டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தொடர்பாக ஆய்வு செய்தார்.
அப்போது, மூடப்பட்டிருந்த தனியார் கண்ணாடி பாட்டில் நிறுவனத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கண்ணாடி பாட்டில்கள் கொசுப்புழு உற்பத்தியாகும் விதமாக குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தனியார் நிறுவன உரிமையாளருக்கு மாநகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து கண்ணாடி பாட்டில்கள் அகற்றப்பட்டதை மாநகர் நல அலுவலர் உள்ளிட் டோர் வியாழக்கிழமை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர். இதுபோல, டெங்கு கொசுப்
புழு உற்பத்தியாகும் கலன்கள் திறந்தவெளியில் போடப்பட்டி ருந்தால், தொடர்புடைய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என மாநகர் நல அலுவலர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி