கரும்பில் மாவு பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

66பார்த்தது
கரும்பில் மாவு பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
கரும்பு பயிரில் சில இடங்களில் மாவு பூச்சி மற்றும் மஞ்சள் வாடல்நோய் தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி, திருச்சி மற்றும் கரும்பு இனப்பெருக்க நிலையம் மூலம் பரிந்துரைக்கப்பட்ட தொழில் நுட்பங்களை பின்பற்றி
கட்டுப்படுத்தலாம்.

இளஞ்சிவப்பு நீள் வட்ட வடிவ பூச்சிகள் கணுக்களுக்கு கீழே இலைப்பரப்புகளின் அடியில் காணப்படும்.
இவை கரும்பின் வளர்ச்சியை குறைப்பதோடு வேரையும் பாதிக்கும். கட்டை கரும்பில் வளர்ச்சி குன்றி சிறிய கணுக்கள் தோன்றி, இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் கரும்பூசனப்படலம் உருவாகி கரும்பு கருநிறமாக காட்சி அளிக்கும். பூச்சி தாக்கிய கரும்பில் எறும்புகளின் நடமாட்டம் அதிக அளவில் தென்படும்.
வயலை களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்கள் விதைத்து 40- 45 நாட்கள் இடைவெளியில் மடக்கி உழுது மண் அணைக்க வேண்டும். கரும்பு தொடர்ச்சியாக 3 முறைக்கு மேல் பயிரிடக்கூடாது. பயிர் சுழற்சி முறையினை பின்பற்ற வேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது வேப்பம் புண்ணாக்கு 1 டன் இட வேண்டும். தழைச்சத்தை அதிக அளவில் இடுவதை தவிர்த்து பிரித்து பரிந்துரையின்படி இட வேண்டும்.

150 மற்றும் 210ம் நாட்களில் தோகையை உரித்து வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி