தஞ்சையில் ஆட்டோ மோதி பைக்கில் சென்ற அரசு ஊழியர் சாவு

79பார்த்தது
தஞ்சையில் ஆட்டோ மோதி பைக்கில் சென்ற அரசு ஊழியர் சாவு
தஞ்சாவூர், மாரியம்மன் கோவில் கம்மாளத் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 57). இவர் ஒரத்தநாட்டில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது நண்பரை பார்ப்பதற்காக சென்றார்.

தனது நண்பரை, பார்த்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தஞ்சை-புதுக்கோட்டை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தபோது காவேரிநகர் அருகே பின்னால் வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோபால் மனைவி மல்லிகா தஞ்சை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி