மதுரை: அழகர்கோவில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நேற்று முன்தினம் நிகழ்ச்சியில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மேளதாளம் முழங்க கோவிலின் உள்பிரகாரத்தில் புறப்பாடு நடந்தது. மாலையில், 1008 சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வருகிற 13ஆம் தேதி மாலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.
ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.