தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், வேளாண்மைத் துறை சார்பில், மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள காவிரி தண்ணீரினை விவசாயத்திற்கு முறையாக பயன்படுத்துவது குறித்து விவசாயிகள் மற்றும் அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நீர்வளத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவசாயிகள் கருத்துக்கள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் கருத்துக்கள் குறித்து அரசின் கவனத்திற்கு தெரிவித்து உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆவன செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு. பாலகணேஷ், வேளாண்துறை, நீர்வளத்துறை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.