பிரதம மந்திரி கிராமச் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில், ரூ. 8. 25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு சாலைப் பணிகளை, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), நா. அசோக் குமார் (பேராவூரணி) ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காடு ஊராட்சியில், பட்டுக்கோட்டை - சேதுபாவாசத்திரம் - தண்டாமரைக்காடு சாலை ரூபாய் 2 கோடியே 86 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டிலும், விளங்குளம் ஊராட்சியில், விளங்குளம் வடக்கு - அம்மணிசத்திரம் சாலை ரூபாய் 2 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டிலும், பேராவூரணி ஒன்றியம் மாவடுகுறிச்சி ஊராட்சியில், மாவடுகுறிச்சி - நாடாகாடு - செங்கமங்கலம் சாலை ரூபாய் 2 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டிலும், பூவாளூர் ஊராட்சியில், இடையாத்தி - உப்பு விடுதி சாலை ரூபாய் 1 கோடியே 42 லட்சத்து 67 ஆயிரத்து மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூபாய் 8 கோடியே 25 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.