பிளெக்ஸ் பேனர் காற்றில் கீழே விழுந்தது அசம்பாவிதம் தவிர்ப்பு

76பார்த்தது
பிளெக்ஸ் பேனர் காற்றில் கீழே விழுந்தது அசம்பாவிதம் தவிர்ப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள பேருந்து நிலையத்தில், நகராட்சி நிர்வாகம் சார்பில், சுமார் 100 அடி நீளமுள்ள நகராட்சி விழிப்புணர்வு விளம்பர பிளக்ஸ் போர்டு, அதிராம்பட்டினம் செல்லும் பயணிகள் அமரும் நிழற்குடையின் முகப்பில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை வீசிய காற்றில், 100 அடி நீளம் உள்ள பிளக்ஸ் போர்டு கழன்று கீழே விழுந்தது. இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் பிளக்ஸ் போர்டு கீழே விழும்போது யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  


உடனடியாக சம்பவத்திற்கு வந்த நகராட்சி ஊழியர்கள் பிளக்சை அகற்றி சென்றனர். இதில் பொதுமக்களுக்கு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படதால் நகராட்சி அலுவலர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது: சுமார் 100 அடி நீளம் உள்ள நகராட்சி விளம்பரம் பிளக்ஸ் இருந்தது. இது துருப்பிடித்து தொங்கிக்கொண்டு இருந்தது.  நகராட்சி நிர்வாகத்தினர் இதை கண்டு கொள்ளவில்லை. சிறிய காற்று அடித்ததில் கீழே விழுந்துள்ளது. இரும்பு கம்பியில் பொருத்தப்பட்ட பிள்கஸ் யாரும் மீது விழவில்லை. இதனால் காயம், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. நிழற்குடை தரமாக உள்ளதாக என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்புடைய செய்தி