உளுந்து சாகுபடியில் அதிக விளைச்சல் பெறுவதற்கான வழிமுறைகள்

79பார்த்தது
உளுந்து சாகுபடியில் அதிக விளைச்சல் பெறுவதற்கான வழிமுறைகள்
செப்டம்பர் மாத பிற்பகுதியில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும் என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

பயறு வகைப் பயிர்களில் உளுந்து அதிக புரதம் மற்றும் கலோரிச் சத்து உள்ளது. இது குறுகிய காலப் பயிர் என்பதால், இதனை தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்.
இந்நிலையில் உளுந்து
விளைச்சலில் அதிக மகசூல் கிடைக்க பின்பற்ற வேண்டிய பாரம்பரியத் தொழில்நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தமிழக வேளாண்துறை
அறிவுரை வழங்கியுள்ளது.

இது குறித்து அத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செப்டம்பர் மாத பிற்பகுதியில் உளுந்து பயிரிடுவதன் மூலம் இயல்பை விட அதிக விளைச்சல் கிடைக்கும்.
மேலும், ஒரு ஏக்கருக்கு 6 லிட்டர் வேப்பெண்ணெய்யைத் தெளித்தால் சாம்பல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். அதேபோல் உளுந்தை இரண்டாக உடைத்து சேமித்தால், கூண் வண்டு தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம். உளுந்து விதையுடன் விளக்கெண்ணெய் தடவினால், அதன் தரம் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி உளுந்து சாகுபடி செய்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என வேளாண் துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி