கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா? போலீஸ் கடும் சோதனை

68பார்த்தது
கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா? போலீஸ் கடும் சோதனை
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடலோர கிராமப் பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையாக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக, ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உள்ளூர் சட்டம் ஒழுங்கு போலீஸாரும் இணைந்து சாகர் கவாச் எனப்படும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை செப்டம்பர் 4, 5ம் தேதிகளில் இரண்டு நாட்கள் நடத்தி வருகின்றனர்.

இதில், ஒத்திகையின் முதல்நாளான 4ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமப்பகுதிகளில் கடலோரக் காவல் படை ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் போலீசார் கடற்கரையில் தீவிர ரோந்து மற்றும் சோதனைகளில் ஈடுபட்டனர். மேலும், மல்லிப்பட்டினம் கடலோர பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கடலுக்குள் சென்று மீனவர்களின் படகுகளில் சோதனை செய்தனர். மீனவர்கள் அடையாள அட்டை, பாதுகாப்பு கருவிகள் வைத்துள்ளனரா என ஆய்வு செய்தனர். மேலும் கடல் எல்லைக்குள், கடலுக்குள் சட்டவிரோத செயல்பாடுகள், அந்நிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களிடம் அறிவுறுத்தினர். இதில் கடலோர காவல் படையினர், காவல் துறையினர் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி