தஞ்சாவூர் மாவட்டம்,
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், குளிரில் வாடும் ஏழைகளுக்கு, சேவை திட்டங்களின் ஒரு பகுதியாக போர்வை வழங்கப்பட்டது.
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், கல்வி உதவித் தொகை, ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு சேவைத் திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கடும் குளிர்காலமாக இருப்பதால், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் உறங்கும் ஆதரவற்ற ஏழைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், யாசகர்கள் எனத் தேடிச் சென்று, குளிரின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் போர்வைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தலைவர் குப்பாஷா அகமது கபீர், செயலாளர் ஹாஜா நசுருதீன், துணைத் தலைவர் ஆரிப், முன்னாள் தலைவர் ஆறுமுகம் சாமி, உறுப்பினர் ஜமீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.