பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், சோமேஸ்வரபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா மக்கள் பயன்பட்டிற்கு திறந்து வைத்து ரேஷன் பொருள்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் என். நாசர், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சுதா, ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி கார்த்திகேயன், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் கலியமூர்த்தி, மமக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, செயலாளர் முஹம்மது மைதீன், அய்யம்பேட்டை பேரூர் செயலாளர் செல்லப்பா, மாவட்ட விவசாய அணி செயலாளர் முஹம்மது பாரூக் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.