பாபநாசம்: பள்ளி கல்வித்துறை சார்பில் மகிழ் முற்றம் தொடக்க விழா

71பார்த்தது
பாபநாசம்: பள்ளி கல்வித்துறை சார்பில் மகிழ் முற்றம் தொடக்க விழா
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மகிழ் முற்றம் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமையில் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் லோகநாதன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் ராஜ்குமார், பொறுப்பாசிரியர்கள் சுப்பிரமணியன், பெர்னாட்ஷா, காந்தி, புவனேஸ்வரி, சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

மொத்தம் பள்ளி மாணவர்கள் 428 பேரும் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பொறுப்பாசிரியர் நியமிக்கப்பட்டனர். குழுவாக இணைந்து செயல்படுதல், வேற்றுமையில்லாத உறவு, சமூக மனப்பான்மை, தலைமைப் பண்பு, நேர்மறை எண்ணங்களை வலுவூட்டுதல், ஆசிரியர் மாணவர் உறவு மேம்படுத்துதல், கற்றல் திறன் மேம்பாடு, விடுப்பு எடுப்பதை குறைத்தல் ஆகியவை மகிழ் முற்றத்தின் நோக்கமாகும் என பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி