தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் நகர செங்குந்தர் நலச்சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு கல்வி ஊக்க பரிசளிப்பு விழா ஆர். எஸ் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ரா. கலைமணி தலைமை வகித்தார் மண்டல செயலாளர் சிவ. இளங்கோவன் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன் உறுதிமொழி ஏற்பு வழங்கினார் , சங்க செயலாளர்
சிவ. இ. சரவணன் வரவேற்று பேசினார் ஆசிரியர் சிவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் தஞ்சை மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் எஸ். சிவா கலந்துகொண்டு சங்க கொடியினை ஏற்றி வைத்து கடந்த 3 ஆண்டுகளில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3-இடங்களை பெற்ற 54 மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு நற்சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் பொதுச் செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், துணை பொது செயலாளர் சோலைமுத்து, கௌரவ தலைவர் சேதுராமன், தொழிலதிபர் திருநாவுக்கரசு, ஆகியோர் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசினார்கள். பரிசு பெற்ற மாணவ மாணவிகள் சார்பாக மாணவி ஸ்ரீ தர்ஷ்னி ஏற்புரை வழங்கினார் விழா நிகழ்ச்சிகளை சங்க பொருளாளர் வி. சிவக்குமார் தொகுத்து வழங்கினார். முடிவில் இளைஞர் அணி அமைப்பாளர் கோ. சீனிவாசன் நன்றி கூறினார்.