பாபநாசம் காவல் நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் புகார்

77பார்த்தது
பாபநாசம் காவல் நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் புகார்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தரக்குறைவாக விமர்சனம் செய்தவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாபநாசம் காங்கிரஸ் நிர்வாகிகள் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பாபநாசம் காங்கிரஸ் கட்சி தெற்கு வட்டார தலைவர் தமிழ்ச்செல்வன், பாபநாசம் நகர தலைவர் பாலாஜி பாபநாசம், நகர துணை தலைவர் ஜார்ஜ், மெலட்டூர் நகர தலைவர் செந்தில்குமார், வர்த்தக அணி தலைவர் சுரேஷ், இளைஞர் அணி நிர்வாகிகள் முரளிதரன், செந்தில்குமார், கரீம் ஆஷிக், ராஜா ஆகியோர் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான கொலை மிரட்டல் மற்றும் எதிர்கட்சித் தலைவராக அவர் செயல்பாட்டை முடக்கும் விதமாக அவரை அச்சுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே பகை, அமைதிக்கு குந்தகம், வெறுப்பு மற்றும் தீய எண்ணத்தை தூண்டுகின்ற பாஜக தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் திட்டமிட்ட முயற்சிகள் ஆகும்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தரக்குறைவாக விமர்சனம் செய்த பாஜக தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி