கோவில்தேவராயன் பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல்

1051பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோயில்தேவராயன் பேட்டையில் பொதுமக்கள் பயணிக்கும் சாலையில், சுமார் 20-அடி ஆழத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் பணிக்களுக்காக பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது. சில நாட்களாக அந்த பகுதியில் மின்சாரம் இல்லை என்பதாகவும்  கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோயில் தேவராயம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்கிற அப்புனு என்பவருக்கு சொந்தமான பசுமாடு அந்த பள்ளத்தில் விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த  பொதுமக்கள் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான கோவில் தேவராயன்பேட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பயணிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பள்ளத்தில் விழுந்து கிடந்த பசு மாட்டை மீட்டனர். பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி