குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

1552பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம, பாபநாசம் தாலுக்கா, வழுத்தூர் கிராமத்தில் ஹாஜியார் தெருவில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளுக்கு புகுந்து அங்குள்ள பொருள்களை எடுத்து தின்று மாமரத்தில் ஏறி நிின்று ன்று கொண்டு அட்டகாசம் செய்து வந்தன. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவு பேரில் தஞ்சை வனசரக அலுவலர் ரஞ்சித் ஆகியோரின் மேற்பார்வையில் பாபநாசம் வனக்காப்பாளர் ரவி பாபநாசம் பிரிவு வனவர் ரவி தோட்ட காவலர் ஜெயபால் மற்றும் வனத்துறை ஊழியர்கள் வழுத்தூர் கிராமத்தில் இரண்டு கூண்டு வைத்து கூண்டுக்குள் வாழைப்பழம், கடலை வைத்து 20 குரங்குகளை பிடித்தனர். தொடர்ந்து அந்த குரங்குகளை திருச்சி மாவட்டம் பச்சமலை பகுதியில் வனத்துறையினர் கொண்டு சென்று விட்டனர்.

தொடர்புடைய செய்தி