தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் மின் கட்டண உயர்வை கண்டித்து அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலாளர் அபுதாஹிர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும், உடனடியாக மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ,
மத்திய, மாநில அரசுகள் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில பொதுச் செயலாளர் மாதவன், காரைக்கால் மாவட்ட செயலாளர் சேகர், விவசாய மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் மகேந்திரன் ஆகியோர்
கண்டன உரையாற்றினார்கள்.
தரங்கம்பாடி வட்டச் செயலாளர் ஆனந்த், செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் மோகன், வலைங்கமான் நகர செயலாளர் அய்யாசாமி, பாபநாசம் ஒன்றிய குழு ரஞ்சித் குமார் உட்பட அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டணர்.