கல்லூரி பஸ், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து

4217பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே நெடுந்தெரு என்ற பகுதியில் தஞ்சையில் இருந்து சுமார் 10லிருந்து 15 மாணவர்களை ஏற்றி வந்த ப்ரீஸ்ட் யுனிவர்சிட்டியை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்தும், கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கிவிட்டு பாபநாசம் வழியாக திரும்பிக் கொண்டிருந்த பொள்ளாச்சியை சேர்ந்த அசோக் லேலாண்ட் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

கல்லூரி வாகனத்தில் வந்தவர்கள் 4-பேர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும், இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநர் பொள்ளாச்சி பொள்ளாச்சி  கோட்டூர் அருகே உள்ள பழனியூர் ஸ்கூல் தெருவை சேர்ந்த சின்னப்ப கவுண்டர் மகன் திருமூர்த்திக்கு கால் பகுதியில் ஏற்பட்டது. அவரை
பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, தஞ்சையில் அமைந்துள்ள காமாட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.  

தொடர்ந்து தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகளும் பாதிப்படைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாபநாசம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில்,   அய்யம்பேட்டை போலீசார் விபத்து குறித்து மேற்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி