கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கலெக்டரிடம் மனு

54பார்த்தது
கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கலெக்டரிடம் மனு
காய்ந்து கருகிய சம்பா, தாளடி பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பதரான பயிர்களுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவ லகத்தில் பொதுமக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக் கள் வழங்கிய மனுக்களை பெற்றார்.

பாபநாசம் தாலுகா 91. புத்துார் கிரா மத்தை சேர்ந்த விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமாருடன் காய்ந்த நெற்பயிர் களை எடுத்து வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;
பாபநாசம் தாலுகா
91. புத்துார் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி பயிர் சாகுபடி செய்துள்ளனர். ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தினால் விவ சாயம் பாதிக்கப்பட்டு பயிரின் கதிர்கள் பதராகி அறுவடைக்கு கூட கூலி வழங்க முடியாத நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வாங்கிய கடனையும் செலுத்த முடியாத நிலை யில் அவதி அடைந்துள்ளனர். எனவே வருவாய்த்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களை நேரில் பார்த்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மகசூல் குறைவாக உள்ளதால் பயிர் காப்பீடு உதவி தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி