தஞ்சையில் சிலம்பம் போட்டி: வீரர்கள் பங்கேற்பு

79பார்த்தது
தஞ்சையில் சிலம்பம் போட்டி: வீரர்கள் பங்கேற்பு
தஞ்சாவூர் சத்யா விளையாட்டரங்கில் மாநில அளவிலான ஓபன் சிலம்பம் போட்டி நடந்தது. மேயர் சண் ராமநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு சிலம்பாட்ட கழக மாவட்ட செயலர் ஆசான் சரவணன், காவியா, என்ரூட் குழுமம் நிறுவனத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழன் சிலம்பாட்ட கழகம் நிறுவனர் ஆசான் விக்கி வரவேற்றார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி தொடங்கி வைத்தார். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த 5 வயது முதல் 18 வயது வரையிலான சுமார் 500க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் கம்பு சண்டை, ஒற்றை கம்பு ஆகிய பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண் களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி