தஞ்சாவூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

50பார்த்தது
தஞ்சாவூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தஞ்சாவூரில், வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நான் துணை முதல்வராக வரவேண்டும் என்ற முதல் குரல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தான் வந்தது. அதன் பிறகு நான் துணை முதல்வராக நியமிக்கப்பட்டேன். நவம்பர் மாதம் பொதுவாக மழை பெய்யும் மாதம் என்பார்கள். இன்று நான் உங்கள் அன்பு மழையில் நனைந்து தஞ்சாவூருக்கு வந்துள்ளேன். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என பலரும் கூறுகிறார்கள். நிதி ஆயோக் புள்ளிவிவரமும் கூறியுள்ளது. 

திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்துள்ளார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள். பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார். நமது கூட்டணி கட்சி தலைவர்களும் திமுக கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுங்கள். அதற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற பாடுபடுங்கள் என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி