ஒரத்தநாடு பேருந்து நிலையம் எதிரே பிரதான சாலையோரத்தில் மளிகை கடை உள்ளது. இந்த கடையில் வெள்ளி இரவு 8 மணி அளவில் வெளியில் கொண்டு போய் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக சமையல் எண்ணெய் டின் உள்ளிட்ட பொருட்களை கடை ஊழியர்கள் கடைக்குள் இருந்து வெளியே எடுத்து வந்து, கடை முகப்பில் வைத்துக் கொண்டிருந்தனர்.
பிறகு சற்று நேரத்தில் எடுத்து வைத்த பொருட்களை வாகனத்தில் எடுத்து செல்ல பார்த்தபோது. சமையல் எண்ணெய் பெட்டி (டின்) ஒன்று மாயமாகி இருந்தது.சமையல் எண்ணெய் டின் திடீரென மாயமாகி இருந்தால் மளிகை கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் இவர்கள் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா
பதிவுகளை பார்த்தனர்.
அப்போது அதில், மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டிருக்கும்போதே கடையின் முகப்பில் பொருட்கள் இருந்த பகுதிக்கு வரும் ஒரு வாலிபர் சமையல் எண்ணெய் டின்னை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இச்சம்பவம் வணிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரத்தநாடு டவுன் பகுதியில் குடிபோதையில் சிலர் எந்த நேரமும் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், இதனால் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர்களின் படங்களை மக்கள் நடமாடக்கூடிய முக்கிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைத்து, பொது மக்களை உஷார் படுத்த போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள