தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் ர. அசோக் தலைமை வகித்தார், மண்டலச் செயலர் ச. சாமிநாதன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளை மூடக்கோரியும், போதைப் பொருள்கள் புழக்கத்தை தடைசெய்யக் கோரி மாநில வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலர் மோ. ஆனந்த், மாவட்டத் தலைவர் சோ. கந்தன், பொருளாளர் பி. அருண்குமார் உள்ளிட்டோர் பேசினர். இதில், திரளான மகளிர் கலந்து கொண்டனர்.