தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டது

83பார்த்தது
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா புத்தகங்களை மாணவிகளுக்கு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிபெறும் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிக்கு வருகை தரும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வருகை தந்த ஒன்று முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்று, வாழ்த்தி பேசினார். தொடர்ந்து மாணவிகளுக்கு அரசின் விலையில்லா புத்தகங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை லதா, ஒன்றிய செயலாளர் சுதாகர், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி