ஸ்ரீ நகர் காலனி ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம்

62பார்த்தது
கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனியில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை முதல் நாள் மகரஜோதி தரிசனம் நடைபெறும். அந்த வகையில் தொடர்ந்து 20வது ஆண்டாக நேற்று (ஜனவரி 14) மாலை திருவாபரண பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து ஆபரணங்களுக்கு பூக்கள் தூவப்பட்டு சுவாமிக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு ராஜா அலங்காரத்தில் ஐயப்பன் காட்சி கொடுத்தார். தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி