கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு அருகே ஷோரணூரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் ரயில்வே மேல்பாலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 4 பேர் மீது ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த வள்ளி, ராணி, லக்ஷ்மன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.