கும்பகோணம் எம்எல்ஏ பாதாள சாக்கடை பணிகளை பார்வையிட்டார்

52பார்த்தது
கும்பகோணம் மாநகராட்சி, சோலையப்பன் தெருவில், 12 வது வார்டு, 13 வது வார்டு, 15 வது வார்டு மற்றும் 16 வது வார்டு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பாதாள சாக்கடை கழிவுநீர் வெளிவராத வகையில், ரூபாய் 64 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை கிணறு அமைக்கும் பணிகளை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்கள். அருகில், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு. ப. தமிழழகன் அவர்கள், பகுதி திமுக செயலாளர் இரா. செல்வராஜ் அவர்கள், நிலைக்குழு தலைவர் டி. ஆர். அனந்தராமன் அவர்கள், வட்ட செயலாளர் ஏ. வி. கே. பாலு அவர்கள், திமுக நிர்வாகிகள் சுப்பையன் அவர்கள், பன்னீர்செல்வம் அவர்கள், செல்வராஜ் அவர்கள், தீனா அவர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி