தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா கோரிக்கை

74பார்த்தது
தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா கோரிக்கை
கள்ள உறவுக்கு ஆதரவாக செயல்பட்ட பாதிரியார் வாலன்டைன் இறந்த நாளான பிப்ரவரி-14 ஆம் தேதி ஐரோப்பிய கிறிஸ்தவர்களில்
ஒரு சிறு பிரிவினரால் காதலர் தினமாக கொண்டாடப்பட்டது.

பண்பாட்டிலும் கலாச்சாத்திலும்,
கற்பு நெறியிலும் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் கற்புக்கரசி கண்ணகி பிறந்த தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக இந்த மோசமான நிகழ்வு பொது வெளியில் ‌அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இது நமது தேசத்தின் கலாச்சார தத்துவத்தின் அடிப்படையையே கொச்சைப்படுத்துவதாகும்.

இந்து மதமும், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவும் காதலுக்கும், காதலர்களுக்கும் என்றைக்கும் எதிரானது அல்ல.

இந்து கலாச்சாரத்தில்
காதலின் சிறப்பும், மேன்மையும்
பல இடங்களில் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

உலக பொதுமறையான திருக்குறளை உலகிற்கு தந்த வள்ளுவப் பெருந்தகை இன்பத்துப்பால் என்ற அதிகாரத்தின் கீழ் உண்மைக் காதலின் மகத்துவத்தையும் இல்லறத்தின் தூய்மையையும் விளக்கியுள்ளார்.

நமது புராணங்கள், இதிகாசங்களில் காதலின் புனிதம் போற்றப்பட்டுள்ளது.

தமிழர்களின் இல்லற வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கும் அகநானூறு போன்ற பல காப்பியங்கள் நம்மிடையே உள்ளன.

டேக்ஸ் :