தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் தான் பணிபுரிந்த அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களுடன் உரையாடினார்,
தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் ராணி ஸ்ரீ குமாருக்கு சங்கரன்கோவிலில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவப்படம், அம்பேத்கார் திருவுருவச் சிலை ஆகிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனை அடுத்து தான் பணிபுரிந்த அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர், செவிலியர்கள், ஊழியர்கள் அனைவருடன் உரையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நன்றி தெரிவித்தார்.