சங்கரன்கோவில் அருகே உலக அமைதி கோபுர திறப்பு விழா நடைபெற்றது

58பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் வீரிருப்பு கிராமத்தில் உலக அமைதி கோபுர திறப்பு விழா நடைபெற்றது.
ஜப்பான் நாட்டின் நிப்போன்சான் மியோஹோஜி என்னும் புத்த சமய பிரிவின் சார்பாக கட்டப்பட்டுள்ள இந்த உலக அமைதி கோபுரம் தென்னிந்தியாவில் உள்ள முதல் உலக அமைதி கோபுரமாக திகழ்கின்றது. இந்த அமைதி கோபுரம் 120 அடி உயரமும் 150 மீட்டர் அகலமும் உடையது. சுமார் 24 ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த உலக அமைதி கோபுரத்தில் புத்தரின் அஸ்தி இரண்டு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. தியான புத்தர், உபதேச புத்தர், பால புத்தர், மஹா நிர்வாண புத்தர் என புத்தரின் நான்கு நிலைகள் பிரம்மாண்ட சிலைகளாக வைக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அருட்திரு இஸ்தானி ஜீ, அருட் சகோதரி லீலாவதி, அருட்சகோதரி ஸ்ரீ குஸா கிமுரா ஆகியோர் ஒருங்கிணைப்பில் இந்த உலக அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது. வீரிருப்பு கிராமத்தைச் சேர்ந்த காந்தியவாதி முத்தையா தானமாகத் தந்த நிலத்தில் இந்த உலக அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது. உலக அமைதி கோபுர திறப்பு விழாவினை முன்னிட்டு இன்று சர்வ சமய வழிபாடு நடைபெற்றது. அனைத்து சமய பாடல்கள் இசைக்கப்பட்டன.
உலக அமைதி கோபுர திறப்பு விழாவில் ஜப்பானின் தலைமை புத்தபிக்கு அருட்திரு. கியொகா இமாய் உலக அமைதி கோபுரத்தை திறந்து வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி