குற்றாலத்திற்கு வரும் பழங்களுக்கு தீவிர சோதனை

77பார்த்தது
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரிய வகை பழங்களான மங்குஸ்தான், டிராகன், ரம்புட்டான் உள்ளிட்ட பழங்கள் தினமும் டன் கணக்கில் கொண்டு வரப்படுகின்றன.

ஆனால் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக, அங்கிருந்து இருந்து குற்றாலத்திற்கு கொண்டுவரப்படும் பழங்கள் புளியரை சுகாதாரத்துறை சோதனைச் சாவடியில் சோதனை செய்த பின்பே அங்கிருந்து வரக்கூடிய பழங்கள் வாகனங்களிலும் அனுமதிக்கப்படுகின்றன.

இதனால் புளியரை சுங்கச்சாவடியில் தீவிரமாக சோதனைகளை ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி